குசேலன் உலகம் முழுவதும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறி்விக்கப்பட்டுள்ளது ஏற்கனவே தெரிந்த விஷயம்.
படத்துக்கான பிரிவியூ ஷோ அதற்கு முதல் நாள் ஜீலை மாதம் 31 ஆம் தேதி மாலை ஐந்து மணிக்கு சாந்தி தியேட்டரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஜினிக்கும் ஆகஸ்ட் மாதத்திற்கும் ஒத்து வராது என்றும் அதனால் குசேலன் வெளியீடு தள்ளிப்போகும் என்றும் புரளி கிளப்பி விடப்பட்டுள்ளது.
ரஜினியின் முதல் படமான அபூர்வ ராகங்களே ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸானதுதான். தெலுங்கில் ரஜினிக்கு சிறந்த நடிகர் என்ற பெயரை வாங்கித்தந்த சிலகம்மா செப்பிந்தியும் ஆகஸ்ட மாதத்தில்தான் வெளியானது.
ரஜினி வெகு சிறப்பாக நடித்த படங்களின் டாப் டென் லிஸ்டில் முன்னணியில் நிற்கும் முள்ளும் மலரும் ஆகஸ்ட்டில் வெளியானதுதான். குணச்சித்திர நடிப்புக்காக ரஜினிக்கு அரை டஜன் விருதுகளை அள்ளித்தந்த எங்கேயோ கேட்ட குரல் படமும் ஆகஸ்ட்டில்தான் வெளியானது. ரஜினிக்கு நடிக்க மட்டுமல்ல கதை வசனமும் எழுத வரும் என்று சகலரையும் சொல்ல வைத்த வள்ளி படமும் ஆகஸ்ட்டில் வெளியானதுதான்.
குசேலன் விஷயத்தில் குளிர் காய்ந்து வழக்கம் போல் எதையாவது தின்று வாந்தி எடுக்கலாம் என்று கிளம்பியிருக்கும் மீடியாவின் கைங்கர்யம்தான் இது என்று கோபப்படுகிறது ரசிகர்கள் வட்டாரம்.
Thursday, July 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment